கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெஹர ரஜமஹா விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பௌத்த தேரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த விஹாரையின் விகாராதிபதி கோபாவக தம்மிந்த தேரர் உட்பட இருவரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கென ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/tO-plNI53rg”]