செவ்வாய்க்கிரகத்தில் விரைவில் வீசவுள்ள புழுதிப்புயலால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படுமென நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் குறித்த புழுதிப்புயல் வீசவுள்ளது. இது சுமார் 18 மில்லியன் சதுரக்கிலோமீற்றர்கள் வரை பரவக்கூடியது. தற்போது குறித்த புயல் வீசுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த புயல் வீசலாமென நாசா எதிர்வுகூறியுள்ளது. குறித்த புயலை செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு செய்துவரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கவுள்ளது. எனினும் குறித்த புயலினால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.