தமிழ்ப்படம் படக்குழுவினர் தமிழ் படங்களின் ஹிட் காட்சிகள் மற்றும் சம்பவங்களை கலாய்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருந்தனர். சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழ்ப்படம் படக்குழுவினர், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை கிண்டல் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படம் அதிவேகத்தில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டிரம்ப்பை கலாய்த்த தமிழ்படம் 2.0 படக்குழு
படிக்க 0 நிமிடங்கள்