fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மத்தல விமான நிலையம் பற்றி மஹிந்த கூறியதற்கு பிரதியமைச்சர் அபேசிங்கவின் பதில்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 19:44

மத்தல விமான நிலையம் பற்றி மஹிந்த கூறியதற்கு பிரதியமைச்சர் அபேசிங்கவின் பதில்.

மத்தலை விமான நிலையத்தை மூடி வைத்தால் கூட இலாபம் ஈட்ட முடியும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது ஒரு அரசியல் பலிவாங்கும் செயல். இவ்வான் பரப்பில் மாதாந்தம் 78 விமானங்கள் பறக்கின்றன. அதனால் இவ்விமான நிலையம் மூடப்பட்டிருந்தால் கூட எமக்கு இலாபம் கிடைக்கும். அமைச்சரவை பத்திரத்தின் மூலம் இவ்விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸில் உள்ள சில மோசடி நபர்களே இந்த விமான நிலையம் மூடப்படுவதற்கு காரணம். இது ஒரு பாரிய தவறாகும். இதனை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காவே இவ்வாறு மூடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதியின் கருத்து இவ்வாறு இருந்த போதிலும் மத்தலை சர்வதேச விமான நிலையம் நஷ்டத்தில் இயங்குவதாக கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்தலை சர்வதேச விமான நிலையம் 2013ஆம் ஆண்டு சைனா எக்ஸிம் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 190 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இவ்விமான நிலையம் தொடர்பாக கோப் கமிட்டி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி பாராபளுமன்றத்தில் தனது நான்காவது அறிக்கையை சமர்ப்பித்தது. 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை காலமும் இந்த விமான நிலையம் நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றது. 2013ஆம் ஆண்டு மத்தலை விமான நிலையத்தின் மொத்த வருமானம் 4 கோடி ரூபாவாகும். அவ்வருடத்தில் இவ்விமான நிலையம் 210 கோடி ரூபா நஸ்டத்தை சந்தித்தது. 2014ஆம் ஆண்டு வருமானம் 13 கோடி ரூபா வரை அதிகரித்த போதும் ஏற்பட்ட நஷ்;டம் 272 கோடி ரூபாவாகம். 2015ஆம் ஆண்டின் வருமானம் ஏழு கோடி ரூபாவை தாண்டியது. ஆனால் அவ்வாண்டின் மொத்த நஷ்டம் 309 கோடி ரூபாவென கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இவ்விமான நிலையத்தின் வருமானம் இரண்டு கோடியை தாண்டிய போதிலும் ஏற்பட்ட இழப்பு 154 கேதாடி ரூபாவுக்கும் அதிகம் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தலை விமான நிலையம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க இவ்வாறு விளக்கமளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மத்தலை விமான நிலையம் ஒரு இலாபம் ஈட்டும் நிறுவனம் என்றும், அரசியல் பலிவாங்கல் காரணமாகவே இதனை நஸ்டம் அடையும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இலாபத்தில் இயங்கவில்லை. மத்தலை விமான நிலையத்திற்காக வருடாந்தம் 100 கோடி ரூபாவை நாங்கள் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. அதனை 15 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். பண்டாரநாயக்க விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமே இக்கடன் செலுத்தப்படுகின்றது. இதற்காக நாம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராலை, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு இலட்;சம் பேர் வெளிநாடுகளக்கு செல்கின்றனர். இவர்களை மத்தலை விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் இவ்விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிலையமாக மாற்ற முடியுமென நாங்கள் எதிர்பார்கிறோம் என அவர் விளக்கமளித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 19:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க