fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 19:25

சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள்.

சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று சிங்கபூரில் உள்ள சன்டோஸா தீவில் இடம்பெற்றது. அத்துடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் இவர்கள் கைச்சாத்திட்டனர்.

குறிப்பாக அணுவாயுதத்தை ஒழிப்பதற்கு இச்சந்திப்பின் போது வடகொரிய சம்மதித்துள்ளது. சிங்கபூரில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பு ஏனையோர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததாகவும் இனி புதிய சூழ்நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு தொடரும் எனவும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை வெள்ளை மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கிம் ஜொங் உன் இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த கால நிகழ்வுகளை மறந்து புதிய உறவுகளை கட்டியெழுப்ப நாங்கள் தீர்மானித்துள்ளோம், இது வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு, இதனால் உலகம் புதிய மாற்றத்தை சந்திக்கும் என தெரிவித்தார்.
வடகொரிய தலைவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையில் இந்த கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐநாவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் வடகொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத போவதாகவும் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்து இருப்போம் என தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 19:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo