fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பழங்களை உலர வைக்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு அவதானம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:34

பழங்களை உலர வைக்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு அவதானம்

பழங்களை உலர்க்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக அமைகின்றன. இலங்கையில் மரணமடையும் மக்களில் 60 வீதமானோர் தொற்றா நோய்கள் காரணமாகவே இறக்கின்றனர். சீனி அதிகம் கொண்ட சிற்றுண்டிகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. இந்நிலையை மாற்றுவதற்காக சிற்றுண்டிகள் மற்றும் பழங்களை உலர வைக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய ஹதவிம அதிகார சபையின் தலைவர் இந்திக்க குருக்கே மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் பழ உற்பத்தி அதிகரிக்கும் காலப்பகுதியில் அவற்றில் அநேகமானவை வீணாகின்றன. இதனால் பழ தட்டுப்பாடு ஏற்படும் போது அப்பழங்களின் போசாக்கு பாதிக்கப்படாமல் உலர்த்தி பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்காக இயந்திரங்களை கொள்வனவு செய்து விவசாய குடும்பங்கள் மேலதிக வருமானத்தை பெறுவதற்கு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2018 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க