ஐந்து ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
Related Articles
ஐந்து ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் செயற்படும் பிரதான புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய தகவல்களை வழங்கியதாக நிறுவனங்கள் மீத குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்காவில் செயற்படும் ஐந்து ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா முன்னெடுக்கும் சைபர் தாக்குதல் இணைய நடவடிக்கைக்கு உதவும் வகையில் இந்த நிறுவனங்கள் செயற்ப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த நிறுவனங்களுடன் அமெரிக்காவிலுள்ள எந்தவொரு நிறுவனமும் நிதி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.