இன்று நள்ளிரவு முதல் லீற்றர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் அமைச்சர் மங்கல சமரவீரவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பஸ், லொறி உள்ளிட்ட வாகனங்கள் மண்ணெண்ணெயை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மறுசீரமைப்பின் போது மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதற்கமைய புதிய விலையாக 101 ரூபா செயற்பாட்டில் இருந்தது. எனினும் விலை அதிகரிப்பால் குறைவருமானம் பெறுவோர் மற்றும் மீனவ சமூகத்தினர் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனையடுத்தே மண்ணெண்ணெயின் விலையை 31 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படவுள்ளது
படிக்க 1 நிமிடங்கள்