கல்கிசை விஞ்ஞான கல்லூரியின் 40வது ஆண்டு விழா இன்று இக்கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
கல்கிசை விஞ்ஞான கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மாணவரகள் அன்பான வரவேற்பை வழங்கினர். இதன்போது கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படட ஆரம்ப செயற்பாட்டு கட்டடம் வகுப்பறை கட்டடங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதிக்கு இப்பாடசாலையின் வித்யாமானி நினைவு மலர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்தும் ஜனாதிபதியினால் இக்கல்லூரியின் திறமையான மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதன்போது பாடசாலையின் மாற்று திரனாளி மாணலியொருவருக்கு ஜனாதிபதி சக்கர நாட்காலியொன்றையும் வழங்கினார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மரம் ஒன்றையும் ஜனாதிபதி நாட்டி வைத்தார். 70ஆம் தசாப்தத்தில் ஆரம்ப காலத்தில் கல்கிசை பகுதியின் மக்கள் பிரதிநிதியான விவியன் குணவர்தனவின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மஹ்மூத் மற்றும் அப்போரைதய வீடமைப்பு அமைச்சர் பீட்டர் கெனமன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கல்கிசை விஞ்ஞான கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. விஞ்ஞானமே எதிர்காலம் என்பதே இக்கல்லூரியின் தொனிபக்பொருளாகும். ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் 2000கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கல்ல}ரியில் கல்வி கற்று வருகின்றனர்.
இதேவேளை 15வது ஆசிய பசுபிக் வலய தொலைதொடர்புகள் தொழில்நுட்ப மாநாடு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை தொலைதொடர்புகள் ஆணைக்குழு இந்த மாநாட்டிற்கான அனுசரணையை வழங்குகின்றது. இன்று ஆரம்பமான இந்த மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது. தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கொள்கை வகுத்தல் மற்றும் தொலைதொடர்புகள் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பவுள்ளது. ஆசிய பசுபிக் வலய தொலைதொடர்புகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இத்துறையுடன் இணைந்த உறுப்பினர்கள், சர்வதேச பிராந்திய அமைப்பின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். இந்த மாநாட்டிற்கு வருகை தந்த பிரமுகர்களை ஆசிய பசுபிக் வலய தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருமதி எரிவன் ஹெவோரன்ஸி வரவேற்றார். ஆரம்ப உரையை இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெர்ணான்டோ நிகழ்த்தினார். இவ்வைபவத்தில் ஆசிய பசுபிக் வலய தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரினால் ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதியும் அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.