fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2018 20:20

கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம்.

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி இன்று பேரணியொன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடிப்பவர்களை தடுத்து நிறுத்த கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்திற்கு எதிரில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச சம்மேளனத்தின் தலைவர் எஸ்.தவச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அருகில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றது. இதனை தொடர்ந்து மாவடட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்;றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். தமது பகுதிகளில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே இவர்களது கோரிக்கையாகும். அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்த இவ்வார்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவின் அலுவலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக மகஜர் ஒன்றை ஆளுனரின் உதவி செயலாளர் ஏ.செல்வநாயகத்திடம் கையளித்தனர். அத்துடன் நின்றுவிடாமல் யாழ். நீரியல்வள திணைக்களம் வரை ஊர்வலமாக சென்ற இவர்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் சுதாகரிடம் தமது கோரிக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். எட்டு அம்வ கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்ட பேரணி இடம்பெற்றது. இதில் 250கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2018 20:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க