பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆறு மணித்தியாலயத்தியாலம் வாக்குமூலமளித்தார். பேர்பசுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசிடம் இருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் சாட்சியமளித்தார்.
பா.உ தயாசிறி ஜயசேக்கரவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்தமையின் பிராகரம் அவர் இன்று முற்பகல்ப பத்து மணியளவில் இத்திணைக்களத்தில் ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 3.50 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடக அவுவலகம் அறிவித்தது. வாக்குமூலளித்தமையின் பின்னர் தயாசிறி ஜயசேக்கர ஊடஙகங்களை புறக்கணித்து கருத்து எதனையும் கூறாமல் சென்றார். தேர்தலின் போது அர்ஜூன் அலோசியல் தனக்கு பத்து இலட்சம் ரூபாவை வழங்கியதாக பா.உ தயாசிறி ஜயசேக்கர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.