இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 226 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.கடந்த 6ஆம் திகதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் போட்டிய ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட மேற்கிந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.பின்னர் முதலாவது இன்னிங்சில் ஆடிய இலங்கை சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.மேற்கிந்தியா தனது 2ஆவது இன்னிங்சில் 7 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.453 என்ற வெற்றயிலக்குடன் 2ஆவது இன்னிங்சில் களம் நுழைந்த இலங்கையணி நேற்றைய இறுதி நாள் ஆட்டத்தில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று 226 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.குசால் மெண்டிஸ் 102 ஓட்டங்களை பெற்றார்.பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.சேன் டவ்ரிச் ஆட்டநாயகனாக தேர்வானார்.இந்த தொடரில் 1-0 எனும் அடிப்படையில் மேற்கிந்தியா முன்னணியிலுள்ளது.இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது டெஸட் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி சென் லூசியாவில் ஆரம்பமாகவுள்ளது.

226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா
படிக்க 1 நிமிடங்கள்