எண்ணெய் தயாரிக்கும் போர்வையில் வெண்சந்தன கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் பன்னல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னல எலபட பகுதியில் வைத்து இந்த வெண்சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன. எண்ணெய் ஆலையொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்;ட இந்த சந்தன மரக்கட்மைகள் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சுமார் 6700 கிலோ வெண்சந்தன மரக்கட்டைகள் இதன்போது பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. 27 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.