fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் கொலை, கொள்ளைகள் வீழ்ச்சியடைந்துள்ளன-ருவன் குணசேகர

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:59

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் கொலை, கொள்ளைகள் வீழ்ச்சியடைந்துள்ளன-ருவன் குணசேகர

2015ஆம் ஆண்டின் பின்னர் கொலை, பெண்கள் மீதான பாலியல் வன்புனர்வு மற்றும் கொள்ளை சம்பவங்கள் கனிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு 476 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் துப்பாக்கி பிரயோகங்களினால் ஏற்பட்ட கொலைகளும் அடங்கும். 2017ஆம் ஆண்டு 452 கொலைகள் பதிவாகியுள்ளன. இவ்வருடத்தில் முதல் ஐந்து மாத பகுதிகளில் 214 கொலைகள் இடம்பெற்றன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது கனிசமான வீழ்ச்சியாகும்;. இதேவேளை 2015ஆம் ஆண்டு 2033 பாலியல் வன்புனர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2017ஆம் ஆண்டு 1732ஆக குறைந்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 734 பாலியல் வன்புனர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொள்ளை சம்பவங்களும் தற்போது கனிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. 2015ஆம் ஆண்டு 4017 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றன. 2017ஆம் ஆண்டு 3366 கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாண்டின் முற்பகுதியில் 1260 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புள்ளி;விபரங்களின் அடிப்படையில் கொலை, பெண்கள் மீதான வன்புனர்வு, கொள்ளை சம்பவங்கள் போன்றவை கனிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டில் குற்றச்செயல்கள் கனிசமாக குறைந்துள்ளன. இந்த அரசாங்கத்தை ஒருவராலும் இதற்காக விமர்சிக்க முடியாது. இலங்கை மன்ற கல்லூரி மேற்கொண்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் இலங்கையில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக யாருக்கும் குறைசொல்ல முடியாது. ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இது தொடர்பாக பல்வேறு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க