fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் 70 ரூபாவுக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:38

செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் 70 ரூபாவுக்கு

எதிர்வரும் செவ்வாய் முதல் மண்ணெண்ணெய்யின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படுமென கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவு முதல் அமைச்சரவையின் அனுமதி பெற்று மண்ணெண்னையின் விலையை 70 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார். இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மண்ணெண்னையை சட்டவிரோதமாக பெற்று வாகனங்களுக்கு பயன்படுத்தினால் அவற்றை கைப்பற்றுவதற்கும் அதற்கான அபராத பணத்தை அதிகரிப்பதற்கும் தேவையான சட்டங்களை வகுத்து வருகிறோம். பெற்றோல் நிரப்பு நிலையங்களில், பஸ், லொறி, டிப்பர்களுக்கு எரிபொருளை வழங்கினால் அவ்வெரிபொருள் நிலையங்களின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஒரு லீட்டர் மண்ணெண்னெய் விலை 106 ரூபாவாகும். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இதன் விலையை 49 ரூபாவாக குறைத்தது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்தமையினால் அண்மையில் மண்ணெண்னையின் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் பிரகாரம் ஒரு லீட்டர் மண்ணெண்னையின் விலை 101 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மீனவர்கள் மற்றும் மண்ணெண்னையை பயன்படுத்தும் மக்களின் நலன்கருதி அதன் விலையை 70 ரூபா வரை குறைப்பதற்கு திறைசேரி தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க