fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:22

இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கையணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.சந்திமால் 44 ஓட்டங்களை பெற்றார்.அதன் பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 223 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்டுக்களை இழந்திருந்த தருணத்தில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.கெய்ரன் பவல் 88 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.453 எனும் இலக்கோடு 2ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி 4ஆவது நாள் ஆட்ட நிறைவின் போது 176 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டக்களை இழந்து தொடர்ந்தும் துடுப்படுத்தாடி வருகின்றது.இன்று போட்டியின் இறுதி நாளாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 19:22

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo