fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 17:54

ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபரை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

‘அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது’ என்று முன்னதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

இந்நிலையில்இ சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சிங்கப்பூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாகஇ இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம்இ அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.

கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.

முன்னதாக சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் டிரம்பிற்கும் கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவை வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால் கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.

இருவருக்குமிடையில் இடம்பெறும் சந்திப்பின் முடிவினை உலகமே எதிர்பார்த்து காத்து நிற்கின்றது.இது ஒரு வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்த சந்திப்பென்பது குறிப்பிடத்தக்கது.

BBC

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2018 17:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க