fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடையக் கூடும்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 16:01

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடையக் கூடும்

நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவமாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையின் காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று நாட்டில் வீசக்கூடுமென்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காற்று டொனாடோ என்ற காற்றாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டபோதிலும் அது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், மத்திய, வட,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 16:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க