fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

SL VS WI 1ST TEST : மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலையில்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 15:39

SL VS WI 1ST TEST : மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலையில்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 07.30க்கு போட்டி ஆரம்பமாகும். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றிருந்தது. கிரான் பவல் 64 ஓட்டங்களுடனும், ஷேன் டோரிச் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இனிங்ஸிற்காக 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்தது. இலங்கை அணி தனது முதல் இனிங்ஸிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணி தலைவர் தினேஷ் ச்சந்திமால் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மிகுவல் கமின்ஸ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இனிங்ஸில் இன்னும் 6 விக்கட்டுக்கள் மீதமுள்ள நிலையில் 360 ஓட்டங்களால் முன்னிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2018 15:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க