மாலைத்தீவில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ம் திகதி தேர்தலை நடத்த அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் திகதி முதல் 25ம் திகதி வரை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி யாமின் அப்துல்ல கயூம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மாலைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்