உலகின் மிகபெரிய சமூக வலைத்தளமான பேஸ் புக் (Face Book) பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கமாகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மூட்டை பூச்சி வடிவிலான மென்பொருள் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ் புக் பாவனையாளர்கள் தங்களது நண்பர்கள் அனுப்பும் தகவல்களை எவரும் அறிந்து கொள்ளலாம் என்பதே தற்போது ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல் ஆகும். மே 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பேஸ் புக் பக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளுக்கு மட்டுமே இத்தாக்கம் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 14 மில்லியன் பேஸ் புக் பாவனையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.