fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்போதைய அரசு அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லை : நீதியமைச்சர் தலத்தா

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 15:34

தற்போதைய அரசு  அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லை : நீதியமைச்சர் தலத்தா

தற்போதைய அரசாங்கம் அரசியல் பலிவாங்களில் ஈடுபடுவது இல்லையென்றும் திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்படுமெனவும் நீதியமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். அரசியல் பலிவாங்கல் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட ஒன்பது சிறை அதிகாரிகளும் பதவி உயர்வு பெற்ற உதவி சிறை அத்தியட்சகர்கள் ஒன்பது பேருக்கும் நியமன கடிதங்களை வழங்கும் வைபவத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். 1999ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் அரசியல் ரீதியில் பலிவாங்கப்பட்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தலத்தா அத்துகோரள சிறைச்சாலை திணைக்களம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென தெரிவித்தார். அரசியல் ரீதியில் பலிவாங்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் நியாயத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2018 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க