வடமாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அதனை எடுத்துச்செல்வதை தடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குழுவினர் இவ்வாறு சட்டவிரோதமாக மணலை அகழ்ந்து அவற்றை விற்பனைக்காக கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்தே இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுளளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை ஓமந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். டிப்பர் வண்டிகளையும் சாரதிகளையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வேலைத்திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்