சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் உலகமெங்கும் நேற்று ரிலீசானது. ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். அத்தோடு இப்படத்தில் ரஜினி முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.
இதுவரை இல்லாத வகையில் ரஜினியை சரியாக பயன்படுத்தி இயக்குனர் பா.ரஞ்சித், ஏற்றவாறு கதையா தெரிவு செய்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்ற்கு திரையரங்குகளில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரை வைத்து பல இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் முதன் முறையாக யாருக்கும் இல்லாத வரவேற்பு இயக்குனர் பா.ரஞ்சித்ற்கு கிடைத்துள்ளது.