ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு
Related Articles
விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நாட்டின் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆசிகூரும் நிகழ்வு இங்கு இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்நிகழ்வு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் விசேட நிகழ்வாகும் எனத் தெரிவித்தார்.
சமாதானம் மற்றும் சகல இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை மூலமாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மக்களினதும் அரசாங்கத்தினதும் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கம் என்ற வகையில் அதற்கான அர்ப்பணிப்பை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இஸ்லாமிய மதத் தலைவர்கள் பாராட்டினார்கள். இதன்போது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனின் முதற் பிரதி ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதுயுதீன், அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.