fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹரகம நகர சபையில் அசாதாரண சூழ்நிலை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 19:35

மஹரகம நகர சபையில் அசாதாரண சூழ்நிலை

மஹகரகம நகர சபையில் இன்று கடும் வாதபிரதிவாதங்கள் ஏற்பட்டன. அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பெண்கள் ஆறு பேரை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டது.

கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மஹரகம நகர சபையில் மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைகுழு வெற்றிபெற்றது. இவ்வாறு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் ஆறு பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஆறு பேர் இதற்கு பதிலாக நியமிக்கப்பட்டனர். சுயேச்சை குழுவிற்கு பதிலாக வேறு கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருப்பதாக நகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இவ்விடயம் தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த சிலர் கருத்துக்களை வெளியிட்டனர்.

 தேவானந்த சுரவீர  –  குழு தலைவர் – ஜே.வி.பி .

“சைக்களில் சின்னத்தில் போட்டியிட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்ட டிராஜ் பியரட்ன தனக்கு மக்கள் வழங்கிய ஆணையை நகர சபையை ஒரு பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தும் நிலைக்கு மாற்றியுள்ளார். சைக்களில் சின்னத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் முதுகை முறித்து அவர்களுக்கு கப்பம் வழங்கி உண்மையிலேயே வெற்றி பெற்றோர் சபைக்கு வருவரை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை ராஜபக்ஷ குழுவினர் மேற்கொண்டனர். வேட்புமனுவை சரியாக நிரப்ப தெரியாத ஒரு குழுவினர் நகர சபையின் உறுப்பினர்களாக மர்றும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது பாரிய தவறாகும். இது மக்களின் ஆணைக்கு எதிரான செயல். “

தனுஷ்க ராமநாயக்க – நகர சபை உறுப்பினர் – யு.என்.பி.

‘தேர்தல் ஆணைக்குமுவின் தலைவர் அவசர அவசரமாக நேற்று பட்டியலில் இல்லாத உறுப்பினர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறு செய்ய முடியாது என்றும் இராஜினாமா செய்வதாக இருந்தால் அனைவரும் அவ்வாறு செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தார். பட்டியலில் அல்லாதவர்களை நியமிப்பதாக இருந்தால் துறைசார் அமைச்சரின் கருத்தை பெற வேண்டுமென உள்ளுராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பப்பட்டுள்ளது. ஆனால் அவை எதுவும் பின்பற்றபடாமம் தேர்தல்கள் ஆணையாளரின் விருப்பத்தின் படி அவை இடம்பெற்றுள்ளன. ‘

இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரியவை நாங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தோம். கொழும்பு மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான தகவல்களின் அடிப்படையில் இந்நியம் வழங்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 19:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க