fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 13:08

வடகொரியாவுனான சந்திப்புக்கு ட்ரம்ப் சம்மதம்

வடகொரிய தலைவர் கெஞ்சி கேட்டதால் தான் இரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சம்மதித்ததாக அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமெரிக்காவுடன் சமாதான போக்கை கடைபிடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக டொனால்ட் டிரம்ப் இச்சந்திப்பை இரத்து செய்தார். பின்னர் மீண்டும் இச்சந்திப்புக்கு டொனால்ட் டிரம்ப் இணக்கம் தெரிவித்தார். இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டிரம்ப்பின் தலைமை வழக்கறிஞர் ரூடி கிளியானி வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் கெஞ்சி கேட்டதால் தான் அவரை சந்திக்க டிரம்ப் மீண்டும் ஒப்புக் கொண்டதாக வழக்கறிஞர தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க