இலங்கையின் புகழுக்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது-சபாநாயகர்
Related Articles
பிணைமுறி தொடர்பான அறிக்கையில் பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களின் பெயர் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட உரையொன்றை நிகழ்த்தினார். பிணைமுறி விவகாரம் தொடர்பில் குரோத மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றம் மற்றும் இலங்கையின் புகழுக்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அர்ஜூன் எலோசியஸிடமிருந்து 118 பேர் பணம் பெற்றார்கள் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அத் தொகை தற்போது 166 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இலலையென சபாநாயகர் தெரிவித்தார். இவ்விடயத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படவேண்டுமென கேட்டுக் கொண்டார். பிணைமுறி அறிக்கையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ பணம் பெற்றார் என்பதில் எவ்வித உண்மையும் இல்லையென சபாநாயகர் தெரிவித்தார்.