உலகில் அதிகமானோரை தாக்கும் மனநோய்
Related Articles
உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால பாதிக்கப்படுகின்றனர். இங்கு, 25 சதவீத மக்களுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனநோய் வரலாம். நிறைய பேர் மனச்சோர்வால் (Depression) கஷ்டப்படுறாங்க. மனச்சிதைவும் (Schizophrenia) அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் . நிறைய பேர் மனநோயால் பாதிக்கப்பட்டாலும், அதை வெளியில் காட்டிக்கொள்வது இல்லை, சிகிச்சையும் எடுப்பதில்லை. நோய் தொடர்பில் பரவலான மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என சில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள் அறியாமை, இவையே காரணம்.
மனநோய் என்றால் என்ன?
மனநோய் இருக்கிற எல்லாருக்கும், ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு அந்த அறிகுறிகள் அதிகமா தெரியும், சிலருக்கு அந்தளவுக்கு தெரியாது. மனநோய் இருக்கிறவங்களால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது, சரியா யோசிக்க முடியாது, மத்தவங்களோட சகஜமா பழக முடியாது. தினம் தினம் வாழக்கையை கொண்டு நடத்த சிரமப்படுவார்கள். சிலர் ரொம்ப நாள் கஷ்டப்படுவாங்க, சிலருக்கு கொஞ்ச நாள்லயே சரியாயிடும். அவங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பொறுத்தும் அவங்களோட சூழ்நிலையை பொறுத்தும் அந்த அறிகுறிகள் மாறலாம்.
மனநோய் சிகிச்சை
பொதுவாக குறிப்பிட்டால் குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது. அடுத்தபடியாக வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சை. மனநோய் வைத்தியர் அல்லது ஆலோசகரிடம் தயங்காது எல்லா பிரச்சனைகளையும் கூற வேண்டும். சரியான சிகிச்சை எடுத்தாதான் நல்ல பலன் கிடைக்கும். அதன் மூலம் தொடர்ந்து சிகிச்சை எடுக்கவும் முடியும் அத்துடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் வைத்தியரால் உங்களுக்கு உதவி செய் முடியும். மனநோய் தொடர்பில் சிகிச்சை பெறும் போது உதவிக்கு நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து செல்லலாம்.
மன நோயை தடுக்க சில எளிய நடைமுறைகள்
ஆலோசகர்களின் வழிகாட்டலை பின்பற்றல்
நேரத்துக்கு சாப்பிடுதல்
நேரத்துக்கு உறங்குதல்
எப்பவும் சுறுசுறுப்பா இருத்தல்
தினமும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால்
ஆரோக்கியமான, நல்ல உணவை சாப்பிடுதல்
அதிக மதுபானங்களை தவிர்த்தல்
ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபடலாம்
தனிமையில் இன்றி அனைவரோடும் சகஜமாக பழகுதல்