ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடிமருந்து கிடங்கொன்று வெடித்து சிதறியதில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கைகுண்டு மற்றும் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடிமருந்து கிடங்கொன்று வெடித்து சிதறியதில் 20 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்