யெமன் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலி
Related Articles
யெமன் கடற்பரப்பில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான முறையில் எத்தியோப்பிய அகதிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். கடல் கொந்தளிப்பே விபத்துக்கான காரணமென தெரியவந்துள்ளது. இந்நிலையில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.