fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும்-பிரதமர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 09:54

ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும்-பிரதமர்.

சவால்களை வென்று ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த 2018 தகவல் தொழில்நுட்ப மாநாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் பணிகள் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலகின் மிக நவீனமான தொழில்துறையை தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் அறிவுசார் பொருளாதார வளர்ச்சியை இலங்கையில் உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நமது நாடு கடன் சுமையில் சிக்கியுள்ள நாடாகும் என்பதை மறக்க வேண்டாம். ஆனால் தற்போது கடனை செலுத்துவதற்கான வருமானம் கிடைத்து வருகின்றது. தலா தேசிய உற்பபத்தியை அதிகரித்து மக்களின் வாழ்வாதார நிலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். முதலில் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்ற வேண்டியதே நமது கடமை. அதனால் தான் எமது நாட்டின் இரண்டு பிரதான துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை செயற்படுத்துவதற்காக தீர்க்கமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தேவையான கடனை கொழும்பு துறைமுகத்தின் வருமானம் மூலம் செலுத்த வேண்டிய தேவையில்லை. வெகு விரைவில் மத்தலை விமான நிலையத்திற்காகவும் இதுபோன்ற திட்டங்களை ஆரம்பிப்போம். சுற்றுலா துறையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தியாவும் சீனாவும் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக சந்தை வாய்ப்பை கொண்ட நாடுகளாகும். அதன் அருகிலேயே எமது நாடு உள்ளது என்பதை மறக்க வேண்டாம். ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்பது போன்று ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை அடைவதற்கு நாங்கள் தயார். தற்போது நாங்கள் ஒரு பில்லியன் இலக்கையே அடைந்துள்ளோம். அதுவும் 25 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறான இலங்கை அடைய முடிந்துள்ளது. உள்ளுர் சந்தையென்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அது ஒன்று மட்டுமே சந்தையல்ல. அறிவுசார் பொருளாதாரம் மிகவும் இன்றியமையாததாகும். அதற்காக தான் எமது பெருமதியான மனித வளத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. எமது மக்களே எமது பலம். மக்கள் மற்றும் எமது கல்வி கட்டமைப்பை முன்னேற்றுவதற்காக எமது திட்டங்களை நாம் செயற்படுத்த முடியும். அதனை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் உயர் மத்திய வருமானம் கொண்ட பொருளாதாரம் ஒன்றை எம்மால் கட்டியெழுப்ப முடியும். உண்மையில் அது சாத்தியம். எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை அடைவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அறிவுடன் கூடிய பொருளாதார கட்டமைப்பை எமக்கு தேவை. இலங்கை மக்கள் அதற்காக பாடுப்பட வேண்டும். அதன் மூலம் இலங்கை மக்கள் நன்மையடைய முடியும் என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2018 09:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க