fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2018 13:38

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்க புதிய நடவடிக்கை

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கென காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மாலை 4 மணிக்குப் பின்னர் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான திட்டங்களை வகுக்குமாறு சுகாதார போஷாக்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கல்லீரல் பொருத்தும் சத்திர சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும் உலகின் ஓரேயொரு நாடு இலங்கையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சத்திர சிகிச்சைக்குத் தேவையான உடற் பாகங்களை விமானம் மூலம் எடுத்து வருவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவைக்கு பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவும் சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 6, 2018 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க