நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அடுத்தவருடம் நடுப்பகுதி வரை இச்செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக குறித்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும் இது தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.