சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளும் சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு கண்டியில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் சபையின் தலைவர் ஸ்ரீயானி குலவங்ச தெரிவித்துள்ளார். ஆயிரம் பாடசாலை மாணவர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.