பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய உலகின் 50 நாடுகள் பிளாஸ்டிக் பாவனையை குறைத்துள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, வியட்நாம், அயர்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. சில நாடுகள் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை விதித்துள்ள போதிலும், அவை வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லையென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இன்று சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கினூடான சூழல் மாசடை முறியடிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் : பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் ஐ.நா அறிக்கை
படிக்க 0 நிமிடங்கள்