fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க வடகொரிய பேச்சுவார்த்தைக்கு தலைவர்கள் தயார்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2018 13:50

அமெரிக்க வடகொரிய பேச்சுவார்த்தைக்கு தலைவர்கள் தயார்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த முன்னேற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. தற்போது, இப்பேச்சுவார்த்தை குறித்து பல தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் சாரா சென்டேஸ் அறிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள பகுதியில் பாரிய இராணுவ பாதுகாப்பு ஒழுங்குகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியொருவரும், வடகொரிய தலைவர் ஒருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அடுத்த வாரம் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க இப்பேச்சுவார்த்தையின் மூலம் அணு ஆயுத பயன்பாடு மற்றும் பூகோல பொருளாதாரம் குறித்து கலந்துரையாடப்படும். கடந்த வாரங்களில் இப்பேச்சுவார்த்தை குறித்து கருத்த முரண்பாடுகள் நிலவிய போதிவும் தற்போது இப்பேச்சுவார்த்தை குறித்து சாதகமான நிலை காணப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2018 13:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க