தென் மேற்கு, பருவநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மழை பெய்ய கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது நாட்டின் தென் மேற்கு பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையும் மேக கூட்டங்கள் நிரம்பிய நிலையும் மேலும் அதிகரிக்கலாமென அறிவிக்கப்படுவதுடன் மேல், தெற்கு, சப்ரகமுவ மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் ஆங்காங்கே மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடுமென திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. இதேவேளை வளிமண்டலவியல் அறிக்கைக்கு அமைய மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.
ஒரு சில மாகாணங்களில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை
படிக்க 1 நிமிடங்கள்