சட்டவிரோத சிகரட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த இச்சந்தேக நபர் இலங்கையர் பிரஜையாவார்.சட்டவிரோதமாக இவர் எடுத்து வந்த 398 சிகரட் பெட்டிகளில் 29 ஆயிரத்து 960 சிகரட்டுக்கள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதன் பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாவாகுமென அறிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்