fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வருமான வரி சட்டமூலத்தை திருத்தி அப்பிரிவை நீக்குவதற்கே நடவடிக்கை-நிதியமைச்சு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2018 14:57

வருமான வரி சட்டமூலத்தை திருத்தி அப்பிரிவை நீக்குவதற்கே நடவடிக்கை-நிதியமைச்சு

சிறுவர் சேமிப்பு கணக்குகளின் வருடாந்த வருமானத்தின் அடிப்படையில் வட்டியொன்றை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒரு சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் வருமான வரி சட்டமூலத்தை திருத்தி அப்பிரிவை நீக்குவதற்கே நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் மங்கல சமரவீர அமைச்சரவைக்கு பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் சேமிப்பு கணக்குகளின் வருடாந்த வட்டியில் ஒரு பகுதியை தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் நட-வடிக்கை எடுத்து வருவதாக ஒரு சிலர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதலே இவ்வாறு வரி அறவிடப்படுவதாகவும் இதற்கு காரணம் கடந்த அரசாங்கமே எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அக்காலப்பகுதியில் சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு 6 வீது வட்டி வழங்கப்பட்டதுடன் சிறுவர் சேமிப்பு கணக்குகளுக்கு 2.5 வீதம் வட்டி வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சி புரிந்த அரசாங்கம் பெற்ற பெருந்தொகை கடனை

தற்போதைய அரசாங்கம் செலுத்துகின்றது. இதற்காக வருமானமும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ள போதிலும் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2018 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க