fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிமலை சீற்றம்-25 பேர் உயிரிழப்பு-300க்கும் மேற்பட்டோர் எரிகாயம்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2018 13:52

எரிமலை சீற்றம்-25 பேர் உயிரிழப்பு-300க்கும் மேற்பட்டோர் எரிகாயம்.

குவாதமாலாவில் பியாகோ எரிமலை சீற்றம் காரணமாக 25 பேர் உயிரிழந்ததுடன் 300 இற்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 சிறுவர்களும் இதனால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாதமாலாவின் தலைநகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இவ் எரிமலை உள்ளது. எல்ரோடியோ பகுதியில் எரிமலை குழம்பு காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்திருப்பதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது வீடுகளிலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் வீடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை அந்நாட்டின் பிரதான விமான நிலையமான லா அருரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் குவாதமாலா அரசாங்கம் அப்பகுதியில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 1974 ஆம் ஆண்டின் பின்னர் இவ் எரிமலை மோசமான முறையில் இயங்க ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2018 13:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க