பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது ட்ரக் வண்டியொன்றில் மோதி கை துண்டமான பல்கலைக்கழக மாணவனின் கையை உடலுடன் மீண்டும் இணைக்க முடியாதென கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவுத்துள்ளது.இரத்னபுரி பெல்மடுல்லவில் பஸ்ஸில் பயணித்தக்கொண்டிருந்த போதே இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது.கை துண்டமான பல்கலை மாணவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.எனினும் கையை உடலுடன் இணைப்பதற்கான விசேட சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.நேற்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது ஜன்னலுக்கு வெளியில் தனது வலது கையை வைத்தமையினால் ட்ரக் வண்டியில் மோதி கை துண்டமான சோக சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கையை உடலுடன் இணைக்க முடியாது-கொழும்பு தேசிய வைத்தியசாலை
படிக்க 0 நிமிடங்கள்