கட்டார் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்தால் யுத்த ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவருமென சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கட்டார் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 விமான ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்ய தயாராகிவருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் கட்டார் உடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொண்ட சவூதி அரேபியா கட்டாருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை ஒரு பாரதூரமான நிலை ஆகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்;டார் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்யவுள்ளது.