திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு
Related Articles
உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் தொடக்கம் ஐயாயிரம் ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு திரைப்படத்துறைக்கு ஆகக்கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றினார். இதன் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்