வீடு ஒன்றில் 20 அடி நீளமான சுரங்கம்
Related Articles
தொல்பொருட்களை பெற்று கொள்ளும் நோக்கில் வீடு ஒன்றில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்ற இரு சந்தேகநபர்கள் வாரியபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். வாரியபொல விஹாரைக்கு அருகாமையில் இருமாடி வீடு ஒன்றில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இருமாடி வீட்டின் சமையல் அறையுடன் இணைந்த பகுதியில் சுமார் 20 அடி நிலத்திற்கு கீழ் தோண்டப்பட்டிருந்த விதத்தை எமது செய்தியாளர்களுக்கு அவதானிக்க முடிந்தது. நிலத்திற்கு கீழ் மேலும் செல்லக்கூடிய விதத்தில் பல அடி நீளமான சுரங்கமொன்றையும் இவர்கள் அமைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களுடன் நிலத்தை அகழ்வதற்கு என பயன்படுத்தப்பட்ட பல உபகரணதொகுதிகளும் கைப்பற்றப்பட்டன. குருநாகல் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் வாரியபொல மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.