இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் இடையே காதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் (டேட்டிங்) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவருகின்றன. ஆனால் இருவரும் காதலிக்கவில்லை என்றும், அவை வெறும் வதந்தி தான் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இருவர் இடையில் சுமார் 10 வருட வயது இடைவெளி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.