உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அழிவின் விளிம்பில்
Related Articles
உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளாக கருதப்படுகின்ற அவுஸ்திரேலியாவின் அற்புத பவளப்பாறைகள் பூகோள வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக அழியும் அவதானத்திற்குட்பட்டுள்ளது. 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் வெப்ப நிலை அதிகரித்ததன் காரணமாக இந்த அற்புத பவளப்பாறைகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டது.
அத்துடன் 2016 ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் வெப்ப அலைகள், காரணமாக இவை துரிதமாக சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டு முதல் பூகோள வெப்ப நிலை தொடர்ந்தும் அதிகரித்ததையடுத்து தற்போது பவளப்பாறைகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.