உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம்

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம்

🕔16:14, 30.ஜூன் 2018

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் சசெம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக

Read Full Article
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம்

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம்

🕔15:41, 30.ஜூன் 2018

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு உள்ளுராட்சி உறுப்பினர்களின் பங்களிப்பை உரிய முறையில் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைவதால் மோதல்நிலை ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகிறது. இதனால் உள்ளுராட்சி மன்றத்தின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விதத்தில்

Read Full Article
கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

🕔15:29, 30.ஜூன் 2018

கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து 676 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5

Read Full Article
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

🕔15:25, 30.ஜூன் 2018

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தாக்குதலில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் உறுப்பினரொருவர் ஆவா குழுவின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்

Read Full Article
வரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம்

வரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம்

🕔13:32, 30.ஜூன் 2018

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம்  அறவிடப்படுகிறது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க இதனை வலியுறுத்தியுள்ளார்.

Read Full Article
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை

🕔13:23, 30.ஜூன் 2018

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான

Read Full Article
வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது

வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது

🕔13:03, 30.ஜூன் 2018

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 6 வயதான குறித்த சிறுமி கடந்த 25ம் திகதி கொலைசெய்யப்பட்டார். சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மாலி இராச்சிய ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல்

மாலி இராச்சிய ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல்

🕔12:54, 30.ஜூன் 2018

மாலி இராச்சியத்திலுள்ள, ஆபிரிக்க முகாம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. செவாரி நகரிலுள்ள முகாம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதோடு, வெடிகுண்டு நிரப்பிய மோட்டார் வாகனங்களை மோதி வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் கவலைக்கிடமாக உள்ளதாக மாலி இராச்சிய

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளர் – சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் – சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல்

🕔12:48, 30.ஜூன் 2018

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பே மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடகொரியா அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்துவது தொடர்பிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சருக்கிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரச்சினைகள் : ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை

புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரச்சினைகள் : ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை

🕔12:41, 30.ஜூன் 2018

புகலிடக்கோரிக்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையினால் பல்வேறு நாடுகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறித்த பிரச்சினையை முழுமையாக முகாமைத்துவப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பேச்சுவார்த்தையில் எவ்விதமான ஒருமித்த தீர்மானமும் எட்டப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article