வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்தித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் முக்கிய பிரதிநிதியான கிம் யொங் ச்சொல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை நியூயோர்க் நகரில் சந்தித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து வெளியேறிய வடகொரிய பிரதிநிதி அமெரிக்காவை வந்தடைந்தர்ர். வடகொரிய அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கிய பிரதிநிதியொருவர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும வடகொரிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பில் டொனால்ட் டிரம்ப்பை கலந்து கொள்ளச் செய்யும் நோக்கிலேயே அமெரிக்க ராஜாங்க செயலாளருடனான சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இவர் அமெரிக்கா விஜயம் செய்தார்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் வடகொரிய தலைவரின் பிரதிநிதியொருவர் அமெரிக்கா விஜயம்
படிக்க 1 நிமிடங்கள்