இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் (31.05.2018)
Related Articles
புகைத்தலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்களை தெளிவூட்டும் வகையில் உலக புகைத்தல் தினம், உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக, 1988 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ‘இம்முறை புகையிலையும், இருதய நோய்களும்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் இலங்கையின் சகல பிரஜைகளும் புகையிலைப் பாவனையைத் தவிர்த்து, புகையிலை உற்பத்திகளின் விற்பனையில் இருந்து விலகி நிற்க வேண்டும் என புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகார சபையும், மருத்துவ சங்கங்களும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
புகையிலை பாவனை காரணமாக, நாடெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் அகால மரணத்தைத் தழுவுகிறார்கள். இதேவேளை புகைப்பிடிப்பவர்களை தவிர்ந்த அண்மையிலிருக்கும் மூன்றாம் தரப்பினரில் வருடாந்தம் ஆறு இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, புகையிலைப் பாவனையில் இருந்து மக்களைப் பாதுகாக்க பாரிய வேலைத்திட்டம் அவசியம் என அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்தார்.